search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு"

    கார்த்தி சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி உள்ளார். எனவே, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் நடைபெறும். இதற்காக வழக்கை இன்று சிறப்பு நீதிமன்றத்திற்கு சிபிஐ மாற்றி உள்ளது. 
    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
    மதுரை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிவகங்கை தொகுதி மேம்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் ஏற்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் கருத்துக்கு மதிப்பளித்து பாராளுமன்றத்தில் செயலாற்றும்.

    தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை.



    காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் கேரளாவில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. வட மாநிலங்களில் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜமான ஒன்று தான். காங்கிரஸ் காரிய கமிட்டி தோல்விக்கான காரணம் குறித்து ஆராயும்.

    காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையம் அமைத்த உத்தரவை மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

    நாட்டில் எதிர்க்கட்சி என்பதே இல்லை. ஒரு அரசாங்கம் மட்டும் தான் இருக்கிறது. என்னை கட்சி சார்பாக பார்க்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்று தான் பார்க்க வேண்டும்.

    அரசாங்கம் கட்சி சார்பை விடுத்து பொதுமக்கள் அனைவருக்கும் சேவை செய்வதாக இருக்க வேண்டும்.

    ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்பது தான் எங்களின் ஒருமித்த கருத்தாகும். அவரே கட்சியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரத்துக்கு, தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 
     
    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சொந்த அலுவல் காரணமாக இந்த மாதம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதால் அனுமதி அளிக்கும்படி கூறியிருந்தார். 



    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு, நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தது. மேலும், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளை ஏற்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே, தான் ஏற்கனவே நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்திய பிணைத்தொகை 10 கோடி ரூபாயை திரும்ப தரவேண்டும் எனக்கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுரை வழங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    தனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். #INXMedia #KartiChidambaram #ED
    மதுரை:

    ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதன் மூலம் அவர் நடத்தும் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

    இந்த நிலையில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது வக்கீல் அருண் நடராஜன் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-



    கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல. இது பழைய செய்தி ஆகும்.

    6 மாதங்களுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை ஊர்ஜிதம் செய்துள்ளது. அவ்வளவு தான். இது நீதிமன்ற உத்தரவு அல்ல.

    மேலும் இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே தான் இருக்கிறது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு கோர்ட்டு நிலுவையில் உள்ளது.

    இவ்வாறு வக்கீல் கூறியுள்ளார். #INXMedia #KartiChidambaram #ED
    ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆஜரானார். #INXMediaCase #PChidambaram
    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.



    இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ப.சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்த ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #PChidambaram

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். #INXMediaCase #IndraniMukerjea #KartiChidambaram
    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்காக பிப்ரவரி 7ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தும்படி கடந்த மாதம் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து அவர் சமீபத்தில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், ஐஎன்எக்ஸ் வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் கூறியிருக்கிறார்.

    இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்திராணி முகர்ஜி ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போதுதான், அவர் அப்ரூவராக மாறுவதற்கு ஒப்புக்கொண்டது ஏன்? அச்சுறுத்தலுக்கு பயந்து ஒப்புக்கொண்டாரா? அல்லது தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று வழக்கறிஞர் கூறியதால் ஒப்புக்கொண்டாரா? என்பது உறுதிப்படுத்தப்படும்.



    அதன்பிறகு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அமைப்பிடம் கருத்து கேட்கப்படும். சிபிஐ அளிக்கும் பதிலின் அடிப்படையில் இந்திராணி முகர்ஜிக்கு மன்னிப்பு வழங்கி அரசுத் தரப்பு சாட்சியாக சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி, அரசுத் தரப்பு சாட்சியமாக சேர்க்கப்பட்டால், கார்த்தி சிதம்பரத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். #INXMediaCase #IndraniMukerjea #KartiChidambaram
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #INXMediaCase #KartiChidambaram
    புதுடெல்லி:

    முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.



    இவ்வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் அப்ரூவர் ஆக இந்திராணி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #INXMediaCase #KartiChidambaram
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும் படி கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. #KartiChidambaram #SC #ED
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் பிப்ரவரி மாதம் 21-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி அளிக்குமாறு கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


    இந்த மனு கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

    இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

    கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உள்ள தேதிகளை ஜன.30-ம் தேதி தெரிவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் முன்பு ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதோடு சட்டத்துடன் விளையாடக் கூடாது என்றும் கார்த்தி சிதம்பரத்தை எச்சரித்தது.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு பொதுச்செயலாளரிடம் ரூ.10 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    ஐ.என்.எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு மார்ச் 5, 6, 7 மற்றும் 12-ந்தேதிகளில் ஆஜராக வேண்டும்.

    நீங்கள் (கார்த்தி சிதம்பரம்) விரும்பியவாறு எங்கு வேண்டுமானலும் பிப்ரவரி 10-ந்தேதி முதல் 26-ந்தேதிவரை செல்லலாம். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சட்டத்துடன் விளையாடக் கூடாது. நீங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் நாங்கள் நிறைய சொல்ல வேண்டி இருக்கும்.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #KartiChidambaram #SC #ED 
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. #KartiChidambaram #SC #ED
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் பிப்ரவரி மாதம் 21-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி அளிக்குமாறு கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

    இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

    கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உள்ள தேதிகளை வருகிற 30-ந்தேதி தெரிவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #KartiChidambaram #SC #ED
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். #INXMediaCase #PChidambaram
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது, அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ப.சிதம்பரத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    இதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஜனவரி 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #PChidambaram
    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் ப.சிதம்பரத்தை நவம்பர் 27-ந் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PChidambaram #inxmediacase

    புதுடெல்லி:

    காங்கிரசின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் ஆகியோரது பெயர் இடம் பெற்றிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். பலமுறை அவரது கைதுக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

    இன்று வரை அவரது கைதுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தை நவம்பர் 27-ந் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து நீதிபதி முப்தா குப்தா உத்தரவிட்டார். #PChidambaram #inxmediacase

    கொடைக்கானலில் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அமலாக்கத்துறை முடக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். #INXMediaCase #KarthiChidambaram
    கொடைக்கானல்:

    முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு சொந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரூ.54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டது.

    கொடைக்கானலில் நாயுடுபுரம் மற்றும் அட்டுவம்பட்டியில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான பங்களாக்கள் உள்ளன. மேலும் 3 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளது.

    அமலாக்கத்துறை உத்தரவை அடுத்து இந்த சொத்துக்களை முடக்கி அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.25 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #INXMediaCase #KarthiChidambaram
    ×